November 23, 2017

பள்ளிக்கூடம்



அது
இரைச்சல்களின் இசையரங்கு - சிறு
இரவல்களின் இறையரங்கு
குறை சொல்ல நாதியற்ற - பல
காவியத்தின் திரையரங்கு

சிந்தனையின் சிகரம் அது - பல
சிநேகத்தின் சின்னம் அது
முதற் காதல் முழைக்கின்ற - ஓர்
விவசாய பூமி அது

இங்கு
மணியடித்துப் பாடங்கள் முடிக்கப்படும் - சிலநாள்
மழையடித்து மணியின் தொழில் நிகழ்த்தப்படும்
முதற் சவரம் செய்த திரு முகங்கள் - இங்கே
கேலியின் அரியணை அமர்த்தப்படும்

சேட்டைகளின் சேமிப்புப் பெட்டகம் திறந்திருக்கும் - சிலரின்
சேமிப்புக்கள் வட்டி வருவாய் அடைந்திருக்கும்
குறும்புகளின் கணக்குகள் குறிப்பெடுக்கப்பட்டால் - இங்கே
குறைந்தது இலட்சம் நூல் இருக்கும்

பள்ளிக்கூடம்
எதிர்கால வரலாறுகளின் வாசற்படி - பல
எதிர்பாரா நினைவாறுகளைத் தீண்டும் செடி

No comments:

Post a Comment