November 23, 2017

உன்னை நான்



கண்ணிமையால் சிறைப் பிடிப்பேன் - உன்னை
கவிதைகளால் கடத்திச் செல்வேன்
காற்றலையால் வீடமைப்பேன் - அங்கே
கார் முகிலால் போர்வை செய்வேன்

கதிரோனுக்கு அழைப்பு வைப்பேன் - உன்
கண்கள் காண விழா அரங்கு வைப்பேன்
வீசும் உன் விழி வெளிச்சம் கண்டு - அவன்
வியர்வை சிந்தவே கால் நனைப்பேன்

குறுநகையைப் பதிவு செய்வேன் - அதை
குரல் தீண்டாப் பாடல் என்பேன்
கூந்தல் முடி நடனம் காண - சிவனின்
கங்கை நதியைக் காக்க வைப்பேன்

இத்தனையும் வடிவம் ஏற்க - காதல்
அகத்தியனாய்த்  தவமிருப்பேன்
சம்மதத்தை மௌனம் கொன்றால் - கணமே
அதிஷ்ட்டம் மீது போர் தொடுப்பேன்!!!!

2 comments:

  1. குறுநகையைப் பதிவு செய்வேன் - அதை
    குரல் தீண்டாப் பாடல் என்பேன்
    கூந்தல் முடி நடனம் காண - சிவனின்
    கங்கை நதியைக் காக்க வைப்பேன்
    semaya irukku

    ReplyDelete