November 23, 2017

மூச்சுப் பந்துகள் வாங்கி வரச் சொல்



நான்
இளங்கதிர் உதித்த வயல்வெளி
இலைகளில் சடையிட்ட ஆலமரம்
பழங்குடி வாழும் மழைக்காடு
எனக்கு மூச்சுப் பந்துகள் வாங்கி வரச்சொல்

விண் வரை முட்டுது என் மூச்சு
சுவாசிக்க எங்கே இளங்காற்று
மாசுகள் அகற்றும் வழிகாட்டு - அன்றேல்
மாசுபோல் எரித்து எனை மாற்று

நான்
ஆட்டத்தை அடக்கும் சிறுத்தையினம்
ஆற்றினில் கிடக்கும் சிறு தவளையினம்
கூட்டினில் வாழும் ஒரு குருவியினம்
எனக்கு மூச்சுப் பந்துகள் வாங்கி வரச்சொல்

சூரியன் வந்தும் இருள் இருக்கு
கருமையே காற்றில் படர்ந்திருக்கு
காற்றினில் கறையை நீ நீக்கு - அன்றேல்
காற்றில் கரைய எனை உருக்கு

மூச்சுப் பந்துகள் வாங்கி வரச்சொல்
சுவாசம் கெடுத்த மனிதனிடத்தில்

No comments:

Post a Comment