November 23, 2017

சாமி யார்?



சிந்தையும் சிவமே
சிதமெலாம் சிவமே
விந்தையில் உய்தொரு
விடைகாணும் சிவமே

உன்னையே மெய்யென
உணர்ந்து யான் இருக்கயில்
தன்னையே சிவமென்போர்
தரணியில் கண்டிட்டேன்

மெய்ப்பொருள் உன்னையே
விற்பொருள் ஆக்கிடும்
சொற்பொருள் உள்ளவர்
சாமியார் என்கினில்

முப்பொருள் ஆண்டிடும்
தக்கருள் ஈசனே
உன்னிலை என்னவோ
உணர்ந்ததைச் சொல்லவோ

தன்னிடம் கடவுளை
காட்டிட அழைப்பவர்
தன்னிலை மறந்திடும்
மங்கையை மயக்குவர்

தன் குணம் கடவுளாய்
தத்துவம் சொல்பவர்
தங்கத்தில் தன்னது
மாளிகை நெய்யுவர்

அருள்வாக்கு அளிப்பரே
அதிசயங்கள் நடிப்பரே
உருவாக்கும் கடவுளையும்
உருக்குலைக்க நினைப்பரே

கடவுள் நான் என்பரே
சாமியார் என்பரே
உணர்வீரோ மூடரே
சாமி யார்? என்பதை

விரும்பியே அடிமையாய்
வீழ்பவர் இருந்திடில்
விடிவுகள் தோன்றுமோ
விஷமிகள் மாயுமோ

ஆன்மீகம் கொய்யடா
கடவுளை உய்யடா
சாமியார் பொய்யடா
சாமியே மெய்யடா

No comments:

Post a Comment