November 24, 2017

அவள்



சிற்பமாய் வந்த தேவதை - அவள்
சிவந்த பாதத் தாரகை
சித்திரம்; சிணுங்கல் அஸ்திரம் - என்னுயிர்
எழுதி வாங்கும் பத்திரம்

தன் மனம் வரமாய்த் தந்தவள் - தன்
தன்மையினால் எனை வென்றவள்
தங்கத்தில் அதன் துங்கத்தில் - அவள்
அங்கத்தின் அழகை நெய்தவள்

கன்னத்தில் விழும் கிண்ணத்தில் - என்
எண்ணத்தின் வண்ணத்தை அள்ளினாள்
அள்ளினாள் வண்ணம் அள்ளினாள் - என்னை
காதலின் காட்டிற்குள் தள்ளினாள்

No comments:

Post a Comment