November 24, 2017

ஜல்லிக்கட்டு



முட்ட வரும் காளை - நீ
முறுக்கி நில்லு தோளை
முரட்டு வீரத் தமிழா - இது
முட் களை எடுக்கும் வேளை

மார் துளைக்கும் கொம்பு
மறத் தமிழனுக்கது துரும்பு
மஞ்சுவிரட்டும் தமிழா - அதன்பகை
அஞ்சி விரட்டிட எழடா
நீ நெஞ்சு புடைத்து எழடா

தமிழின் தடயம் தறிக்கும்
தமிழ் மரபின் மரபணு பறிக்கும்
தறி கெட்டவர் கனவை முறிக்க
எம் எழுகுரல் எங்கும் தெறிக்கும்
மீண்டும் ஜல்லிக்கட்டுகள் தெறிக்கும்

ஏறு தமிழா ஏறு - நீ
ஏறு தழுவி ஏறு
நூறு தடைகள் வரினும் - அதன் மேல்
எரி தணலாய்த் தூறு

No comments:

Post a Comment