November 24, 2017

அழகால் கொல்லும் அரக்கி



அடி அருவா விழி அழகி - உசிர
அறுக்கிறியே அருவி
இரும்பா இருந்த மனசு - உன்னால்
துரும்பா ஆகுது இழகி

அணையா நிலவப் பழமா - நான்
அடைய நினைக்கும் குருவி
அடடா காதல் இதுவா - என்ன
அழகால் கொல்லும் அரக்கி

என்ன அழகால் கொல்லும் அரக்கி....

மனச மண்ணா நீ பிசஞ்சு
மட் பாண்ட சூளை வைக்கிறியே
மனச எரிக்கத் தீ எதுக்கு - உன்
மௌனக் கதவ அடைக்கிறியே

சிதறும் சிரிப்ப நான் புடிக்க
சிறுவன் போல வீழ்த்துறியே
கதறும் குழந்த கை விரலா - இறுக
இதயம் நசுக்கிறியே

மொறச்சு மொறச்சுப் போனாலும் - நான்
முழைக்கும் விதையா மேலெழுந்தேன்
சிரிச்ச காரணம் தெரியாம - இப்போ
சரிச்ச மரமா சாஞ்சுபுட்டேன்

என்ன அழகால் கொல்லும் அரக்கி....

நீ பச்சப் பாசிப் பதனாக - என்
மொத்த வயசும் வழுக்குதடி
உன் கொச்சத் தமிழக் கேட்டாலும் - கவி
பட்ட மரமாத் துளுக்குதடி

சட்டைப் பையில் பணமாக - உசிர்
எட்டி எட்டிப் பார்க்குதடி
கட்டுக் கட்டா உசிர் வாங்கி - என்ன
காதல்ப் பொருளா வாங்கிக்கடி

சவரம் செய்யும் அலகாக - என்
கவனம் எல்லாம் ஈர்க்கிறியே
கவனம் கொஞ்சம் கலையாதே - என்
கனவு காயம் தாங்காதே

என்ன அழகால் கொல்லும் அரக்கி
ஒரு முற அழகாக் கொல்லு அரக்கி...

No comments:

Post a Comment