November 23, 2017

தாலாட்டும் தாயெங்கே



செத்தைக் குடிசையால் வீடு கட்டி - பழஞ்
சேலையினால் ஒரு தொட்டில் கட்டி
தாலாட்டும் தாயெங்கே மெட்டுக் கட்டி - இன்று
தாலாட்டுப் பாடுவது பாட்டுப் பெட்டி

அன்பெல்லாம் கன்னத்தில் அள்ளிக்கொட்டி - முறை
ஆறேழு முத்தத்தால் நெற்றி முட்டி
தாலாட்டும் தாயெங்கே மெட்டுக் கட்டி - இன்று
தாலாட்டுப் பாடுவது பாட்டுப் பெட்டி

ஆராரோ பாடிட நேரமில்ல - குழந்தைக்கு
யாராரோ தாய் தந்தை தெரிவதில்ல
அடித்தாரைச் சொல்லியழக் கேட்பதில்ல - இன்று
அழுதாலும் அரவணைக்க நாதியில்ல

தாலாட்டுக்  கேட்பது போல் வரமும் இல்ல - அது
தாளத்தின் தாயென்றால் தவறும் இல்ல
புலம்புகின்ற புதுப் பாடல் புனிதம் அல்ல - இது
புரியாத தாய்களுக்கு எதை நான் சொல்ல?

No comments:

Post a Comment