November 24, 2017

மௌனப் பட்ஷிகள்


மெல்ல மெல்லச் சிறகடிக்கிறது - அது
மேகம் கடக்க எனை அழைக்கிறது
கொல்லக் கூட வாய்ப்பிருக்கிறது - அதனில்
கறுப்பு நிலவு உதித்திருக்கிறது

அவைதான் மௌனப் பட்ஷிகள் போலும்

சிறகின் மேலே வில் இருக்கிறது - அவள்
வியக்கும் போது உயர்ந்திருக்கிறது
கருமை வானவில் இரண்டிருக்கிறது - அவளின்
புருவம் அதுவென விடை கிடைக்கிறது

அவைதான் மௌனப் பட்ஷிகள் போலும்

பட்ஷிகள் பழத்தை ஏன் வெறுக்கிறது - தினம்
பட்டினியிருந்து எனை ருசிக்கிறது
பார்வைகள் ஆயுதப் போர் தரிக்கிறது - ஜெயிக்க
பாவையின் இமைக்கும் வாள் இருக்கிறது

அவைதான் மௌனப் பட்ஷிகள் போலும்

No comments:

Post a Comment